எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியும் நாமும்
__________________________
நாளுக்கு நாள் ஒவ்வொரு செக்கனும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்த வண்ணம் உள்ளது. எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களிட்ற்கும் நன்மை தீமை என்று வழங்கினாலும் தொழில்நுட்பம் மனிதரது அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து அதனை தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. எவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சிகள் இடப்படுகின்றது என்பதை பார்த்தோமானால்.
AI (செயற்கை நுண்ணறிவு )
செயற்கை நுண்ணறிவு என்பது என்பது ஒரு இயந்திர நுண்ணறிவு என்று கூறலாம். செயற்கை நுண்ணறிவு இப்போது பரவலாக பேசப்படும் ஒன்றாகும்.
நவீன வளர்ச்சியால் இப்போது ஒரு அரட்டை bot இல் இருந்து தன்னியக்கமாக இயங்கும் நவீன வாகனங்கள் என அனைத்திலும் ai இப்பொழுது ஒரு பெரும் மாற்றத்தை உற்படுத்தி காணப்படுகின்றது.
இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப நகரமாக்கல் மற்றும் பல்வேறுபடட தொழில்களில் இந்த AI இன் பயன்பாடு அதியுச்சமாக காணப்படும்.
AR (Augmented reality) தொழில்நுட்பம்
AR தொழில்நுட்பம் என்பது கணணியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போன்று காட்டுவதாகும்.
அதாவது எமது சூழல் உட்பட கணணியால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் வடிவங்களை கையாளக்கூடியவாறு காணப்படும். இது தற்போது கூடுதலாக கணனி விளையாட்டுகள், திரைப்படங்கள் போன்றவற்றில் பயன்படுகின்றது.
இதனை ஒரு சாதனம் மூலம் அல்லது உடல் அணிகலன்கள் மூலம் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக கை உறைகள், மூக்கு கண்ணாடி, ஆடை என்பவற்றை பயன்படுத்தி செயற்ப்படுத்தப்படுகின்றது. இது தற்போது விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக காணப்படுகின்றது.
5g network
5g தொழில்நுட்பம் புதிதாக உருவாக்க படைத்து கிடையாது ஏற்கனவே நம் பிரயோகத்தில் இருக்கும் 4g தொழில்நுட்பத்தின் அடுத்த கடட நிலைக்கு கொட்டுவருத்தல் தான் 5g தொழில்நுட்பமாகும்.
இதுக்கு நான் தட்பூது பயன்படுத்தும் வளையபின் 1000 மடங்கு வேகம் கூடியதாகும். இதன் வளர்ச்சியால் தானியங்கி இயந்திரங்கள் , தோலை அறுவைசிகிச்சை, smart home போன்றவற்றை அமுல்படுத்த முடியும்.
குவாண்டம் தொழில்நுட்பம்
இந்த தொழில்நுட்பம் அணுக்கள் மற்றும் துவல்களால் இயற்கையை இணைக்க பயன்படுகின்றது. இதன் வளர்ச்சி மூலம் பரியளவான கண்டுபிடிப்புக்களிற்கான பிரச்சனைகளை ஒரு செக்கனில் முடிக்க கூடிய அளவு வேகத்தில் செயற்ப்படும் ஒன்றாக இந்த குவாண்டம் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
– Shanuja Kanthakumar –