முதன்முதலாக பரீட்சையை கண்டு பிடித்தது யார் ?
__________________________
பொதுவாக பாடசாலை காலத்திலிருந்து அனைவருமே ஏதோ ஒரு பரீட்சையை எழுதியவர்களாகவே காணப்படுவார்கள். பரீட்சை என்றாலே மாணவர்கள் பயப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றது. பரீட்சை நேரத்திலோ அல்லது பரீட்சை பற்றிய கதைகளை நண்பர்களுடன் கதைக்கும் போதோ எப்போதாவது நாம் “ இந்த பரீட்சையை கண்டு பிடித்தவர் யார் “ என்ற கேள்வியுடன் அவரை திட்டிய வண்ணம் உரையாடுவது வழமை.
அந்த வகையில் முதன்முதலாக பரீட்சையை கண்டு பிடித்தவர் henry fishel எனும் ஒரு தொழிலதிபர் மற்றும் தத்துவவியலாளர் ஆவர்.
இவர் அமெரிக்க நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இவர் ஒரு நாள் தனது மாணவர்களுக்கு கற்ப்பித்து கொண்டு இருக்கும் பொழுது அவர்கள் அனைவருக்கும் தான் கற்ப்பிப்பது விளங்குகின்றதா ?
என்ற கேள்வி ஏற்ப்பட்டது. ஆகவே ஒவ்வொரு மாணவனாக இது உனக்கு விளங்கியதா? என்று கேட்டு கொண்டு இருந்தார் இவ்வாறு ஒவ்வொரு மாணவனாக வினவியபோது அவருக்கு நேரம் இதனால் செலவாகின்றதே இதற்கு ஏதும் மாற்று வழி தேட வேண்டும் என்று எழுத்து மூலம் எழுதி வாங்கலாம் என்று உருவாக்கியதே இந்த பரீட்சை ஆகும்.
இவர் ஒரு அமெரிக்கா நாட்டவராக இருப்பினும் முதன் முதலாக பரீட்சை அமெரிக்காவில் நடைபெறாமல் சீனாவில் தான் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற பரீட்சை imperial exam எனப்படுகின்றது. இதுவே முதல் முதலாக வைக்கப்பட்ட பரீட்சை ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் தான் அமுல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பரீட்சை என்ற ஒன்று நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒன்றே ஆகும்.
இதில் ஒன்றை கவனித்தோமானால் இந்த பரீட்சையே நமக்கு நாம் படிக்கும் பாடம் விளங்குகிறதா? என்பதற்ககாவே உருவாகியிருக்கிறது. ஆகவே பரீட்சை எனும் போது பயப்படுவதோ துக்கத்தில் இருப்பதோ வேண்டியதில்லை.
எங்கள் விளக்கத்தின் படி விரும்பிய படத்தை கற்று விருப்பத்துடன் பரீட்சை எழுத பழகிக்கொள்ளுதல் அவசியமாகும்.
– Shanuja Kanthakumar –